Updated: 13-01-2022 06:13 pm
அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்து வழக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு!
கடந்த 2019 ஆம் ஆண்டு ,பாஜக தலைமையிலான அரசு அதில் பொறுப்பேற்றவுடன் அணைகள் பாதுகாப்பு சட்டத்தை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றியது.ஆனால் இந்த சட்டம் மாநில உரிமையை பறிக்கும் வகையில் அமையும் என்று பலர் கருதிய நிலையில், மயிலாடுதுறை திமுக எம்பி ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். அதில் அவர் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணைகளின் உரிமையை மத்திய அரசு எடுத்துக் கொண்டு ஒரு புதிய சட்டத்தை கொண்டுவருவது சட்டத்திற்குப் புறம்பானது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவானது உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி,ஆதிகேசவலு ஆகியோர் அமர்வில் கடந்த 11 ம் தேதி விசாரணைக்கு வந்தது . இந்த விசாரணையின் போது மத்திய அரசு பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் வாதிட்ட கூடுதல் சொலிஸ்ட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் கோரிக்கை வைத்தார்.அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
#highcourt