Updated: 18-12-2021 08:58 am
அதிமுக மு.அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க கூடுதலாக மூன்று தனிப்படைகள்...!
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதால், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை தேடி தீவிரமாக தேடி வருகின்றனர்.மேலும் அவர் பெங்களூருவில் தங்கியிருக்கும் தகவல் கிடைத்துள்ளபடியால் கூடுதலாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.மொத்தம் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர் விருதுநகர் போலிசார்.
தற்போது ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார், ரமணன், கார் ஓட்டுநர் ராஜ் குமார் ஆகியோர் கைது செய்த தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். #virudhunagarPolicerajendirabalaji