Updated: 06-01-2022 08:31 pm
நீட் தேர்வு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் -முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
இந்த அண்டின் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கியதும் ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் தேர்வு ரத்து செய்ய ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளதற்காகவும்,அதற்கு அவர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏக்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.மேலும் டி.ஆர்.பாலுவும் இதே கருத்தை முன்வைத்தார்.இதனையடுத்து ஸ்டாலின் ஒரு அதிரடி அறிவிப்பை சட்டசபையில் வெளியிட்டுள்ளார்.அதன்படி வருகிற 8 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி முடிவெடுக்க திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது அதிமுக மற்றும் பாஜகவினரிடையே. நெருடலை ஏற்ப்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது.#neet