tamil news
  • மாவட்ட சுகாதார சங்கம் வேலை
  • test
  • டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும்-அனைத்து அரசு, தனியார் ஆய்வகங்களுக்கு பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தல்
  • அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்டாலின் இரங்கல்! - ரூ.3 லட்சம் நிதியுதவி!
  • இஸ்ரேலில் 160 பேர் உயிரிழப்பு. 1000 பேர் காயம்.. உலக அளவில் பெரும் சோகம்..!!
  • கர்நாடக எல்லை அத்திப்பள்ளில் பட்டாசு கடை விபத்து - ,இதுவரை 14 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

கங்கனா பத்ம பூசன் விருதை திரும்ப் பெறக் கோரி குடியரசு தலைவருக்கு டெல்லி மகளிர் ஆணையம் கடிதம்!

Updated: 14-11-2021 10:34 pm

tamil news

கங்கனா பத்ம பூசன் விருதை திரும்ப் பெறக் கோரி குடியரசு தலைவருக்கு டெல்லி மகளிர் ஆணையம் கடிதம்!


இந்திய அளவில் உயரிய விருதான பத்மபூஷண் விருதானது இரண்டு நாட்களுக்கு முன்பு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டது.


இந்த விருதை பெற்ற நடிகைகளில் ஒருவர் கங்கனா ரானட்.இவர் பேட்டி அளிக்கும் போது,"இந்திய நாடு ,2014 ல் தான் சுதந்திரம் பெற்றுள்ளது ,இதற்கு முன்பு பெற்ற சுதந்திரம் பிச்சைதான்" என்று கூறியிருந்தார்.இது தொடர்பாக பல்வேறு கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பி வந்தனர். காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தி ,"சுதந்திர போராட்ட தியாகிகளை அவமதிக்கும் வகையில் கங்கனா ராவத் இன் பேச்சு உள்ளதால் அவருடைய பத்மபூஷன் விருதை திரும்பப் பெற வேண்டும்", என கோரிக்கை வைத்திருந்தார். அதேபோல் பல்வேறு அமைப்பினரும், சுதந்திர போராட்ட தியாகிகளும் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


 இந்த நிலையில் டெல்லி மகளிர் ஆணையம் ,இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறது.அதில் மேலே குறிப்பிட்டுள்ள காரணங்களால் கொடுக்கப்பட்ட பத்மபூஷன் விருது இந்திய அரசால் திரும்பப் பெறப்பட வேண்டும் என்ற குறிப்பிட்டுள்ளது. ஆனால் பாஜக தரப்பில் இதுவரை எந்த ஒரு கண்டனக் குரலும் கங்கனா நடிகைக்கு எதிராக எழவில்லை. தற்போதைய காலகட்டத்தில் சர்ச்சைக்கு வித்திடும் வகையில் ,நெகட்டிவ் பேச்சுக்கள் , பேசி பிரபலமாவதை ஒரு உத்தியாக பல பேர் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் கங்கனா ரானட் மீது பல்வேறு மாநிலங்களில் புகார்களின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.