Updated: 13-11-2021 06:56 am
"ஜெய் பீம்" பட சர்ச்சை - அன்புமணிக்கு ட்வீட் மூலம் பாடம் எடுத்த திருமாவளவன்.
தமிழகத்தில் சூர்யா நடித்த அவரது தயாரிப்பில் உருவான "ஜெய் பீம்" படம் வெளியானதிலிருந்து பாமக தரப்பில் அன்புமணி வெளியிட்ட கருத்துக்கள் வன்னியர் சமூகத்தில் மக்களிடையே ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியது.
அதேபோல் அவர் சூர்யாவை நோக்கி பல கேள்விகளை தொடுத்திருந்தார். குறிப்பாக உதவி ஆய்வாளர் கதாபாத்திரத்திற்கு "குருமூர்த்தி" என பெயர் சூட்டியது, காடுவெட்டி குருவின் பெயர் தான்; அவரை கொச்சைப் படுத்தும் நோக்கிலும் வன்னியர் சமூகத்து மக்களை கொச்சைப்படுத்தும் நோக்கிலும் புகைப்படம் அமைந்திருப்பதாக கருத்து தெரிவித்ததால், அச்சமூகத்தின் மக்கள் ஆங்காங்கே ரசிகர் மன்ற கலைப்பு கலை செய்வதும், கண்டனக் குரல் எழுப்புவதும், போராட்டம் நடத்துவது என இருந்து வந்தனர்.
இந்த நிலையில் சூர்யா ஏற்கனவே அதற்கு விளக்கம் அளித்து பதிலடி கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து நீதிபதி சந்துரு அவர்களும் அதற்குரிய விளக்கத்தையும், அவர் பாணியிலேயே கொடுத்திருந்தார்.
தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் டாக்டர்.தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் மேலும் ஒரு பதிலடியை கொடுத்துள்ளார்.அதில் விஜய் என்பவர் ட்வீட் செய்ததை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அப்லோட் செய்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது," 'திரௌபதி' படத்தில் தொல்.திருமாவளவன் மாதிரியே ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி தலித்துகளை அவமானப்படுத்தும் நோக்கில் படம் நகர்கிறது.ஆனால் திருமாவளவன் இப்படம் பற்றி கேட்டதற்கு," இந்தப் படத்தைப் பார்க்கவும் நேரமில்லை, அதைப்பற்றி சிந்திக்கவும் நேரமில்லை" என்று பதிலளித்து கட்சியினரை அமைதி கொள்ள செய்தார். இதுதான் "தலைமை பண்புக்கு அழகு" , ஆனால் அன்புமனஇ அப்பாவி வன்னிய மக்களின் உணர்ச்சியை தூண்டி விடுகிறார் " ,என்று பதிவிட்டிருந்தார்.
தற்போது இந்த ட்வீட் சினிமா துறையிலும் தமிழக அரசியல் துறையிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த கருத்து தெரிவிக்கும் பலர் இல்லாத ஒரு பிரச்சினையை அன்புமணியே உருவாக்கி வைக்கிறார். ர நகர்புற தேர்தலுக்காக இந்த படத்தை கையில் எடுத்திருக்கிறார் அன்புமணி என்பது போல பலர் விமர்சித்து வருகின்றனர்.#tweet