tamil news
  • மாவட்ட சுகாதார சங்கம் வேலை
  • test
  • டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும்-அனைத்து அரசு, தனியார் ஆய்வகங்களுக்கு பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தல்
  • அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்டாலின் இரங்கல்! - ரூ.3 லட்சம் நிதியுதவி!
  • இஸ்ரேலில் 160 பேர் உயிரிழப்பு. 1000 பேர் காயம்.. உலக அளவில் பெரும் சோகம்..!!
  • கர்நாடக எல்லை அத்திப்பள்ளில் பட்டாசு கடை விபத்து - ,இதுவரை 14 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

கிருஷ்ணகிரியில் பைக் திருட்டு கும்பல் கைது! போலிசுக்கு மக்கள் பாராட்டு!

Updated: 17-11-2021 04:51 pm

tamil news

கிருஷ்ணகிரியில் பைக் திருட்டு கும்பல் கைது! போலிசுக்கு மக்கள் பாராட்டு! 


 கிருஷ்ணகிரி மாவட்டம் ,சூளகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக நடைபெற்ற இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்மந்தமாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் ஒசூர் உட்கோட்ட உதவி கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் சூளகிரி காவல் ஆய்வாளர் K.M. மனோகரன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர்கள் V. கணேஷ்பாபு மற்றும் C ஆனந்தன் உள்ளிட்ட காவல் ஆளிநர்கள் அடங்கிய தனிப்படை குழு ஒன்று அமைக்கப்பட்டது.


அதனை தொடர்ந்து நேற்று 15.11.2021ம் தேதி காலை சூளகிரி அருகே மேற்படி தனிப்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து நபர்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தபோது 5 நபர்களும் தங்களது பெயர்களை முறையே 1. தட்சணாமூர்த்தி (26) த/பெ கோவிந்தன் குண்டியால்நத்தம் (கிராமம்) அங்கிநாயனப்பள்ளி (அஞ்சல்) பர்கூர் (வட்டம்) கிருஷ்ணகிரி (மாவட்டம்) தற்போது அண்ணா நகர் வாணியம்பாடி ரோடு பர்கூர். 2 அரசன் (24) த/பெ முனுசாமி க.எண். 4/96 சின்னவேப்பம்பட்டு (கிராமம்) கலந்தரா (அஞ்சல்) வாணியம்பாடி (வட்டம்) திருப்பத்தூர் மாவட்டம்) 3. சந்தோஷ் (19) த/பெ சுரேஷ்குமார் சின்னவேப்பம்பட்டு (கிராமம்) கலந்தரா (அஞ்சல்) வாணியம்பாடி (வட்டம்) திருப்பத்தூர் (மாவட்டம்) 4. சதிஷ் 6 சதிஷ்குமார் (24) த/பெ சேட்டு பனந்தோப்பு கிராமம். சேர்ப்பாடி அஞ்சல் அனணக்கட்டு வட்டம் வேலூர் மாவட்டம். 5. திருவேங்கடம் ( 31) தபெ சங்கர் க.எண் 2/117 சின்னவேப்பம்பட்டு (கிராமம்) கலந்தரா (அஞ்சல்) வாணியம்பாடி (வட்டம்) திருப்பத்தூர் (மாவட்டம்) என்றும், கடந்த மாதம் சப்படி அருகே இருசக்கர வாகனத்தை திருடியதும் அதனையடுத்து சூளகிரியில் உள்ள ஒரு தக்காளி மண்டி அருகே இருசக்கர வாகனம் ஒன்றை திருடியதும் மேலும் குருபரப்பள்ளி, கிருஷ்ணகிரி தாலுக்கா. பர்கூர் மற்றும் ஒசூர் சுற்றியுள்ள பகுதிகளில் திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.


 இதனை அடுத்து சூளகிரி போலிஸார் அவர்களை கைது செய்து , அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அவர்கள் பல ஊர்களில் திருடி பதுக்கி வைத்திருந்த மொத்தம் ரூபாய், 25 இலட்சம் மதிப்பிலான 41 இரு சக்கர வாகனங்களை கைப்பற்றினர். அனைவரையும் ஒசூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ,"இதுபோன்று திருட்டு செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல் துறையின் நடவடிக்கை கடுமையாக இருக்கும் ", எச்சரிக்கை செய்துள்ளார்.இந்த தகவல் தெரிந்த அப்பகுதி மக்கள் சூளகிரி போலிசாரையும்,ஆய்வாளர் மனோகரன் மற்றும் எஸ்.ஐக்கள் கணேஷ்பாபு,ஆனந்தன் ஆகியோயோரை வெகுவாக பாராட்டினார்கள்.#Biketheft