Updated: 13-11-2021 08:35 am
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கட்சிரோலி பகுதியில் கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட்கள் அதிகமாக குழுக்களுக்களுடன் உளாவருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையை நேற்று காலை 6 முதல் ஆரமிக்கப்பட்டுள்ளதாம்.
அந்த போலிஸ் குழுவில் சுமார் 500 போலிசுகள் 16 குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். தீவிர தேடுதல் வேட்டையில் சுமார் 26 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த துப்பாக்கி சண்டையில் 4 காவல்துறை வீரர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும்,அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த எண்கவுண்டர் ஆப்ரேஷன் மகாராட்டிரா மாநில வரலாற்றில் 2 வது முறையாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்பு 2018 ல் இங்கு இதே போன்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.