Updated: 18-11-2021 09:09 pm
நாளை காலை 3 டூ 6 ல் கரையை கடக்கும் மண்டலம் ! பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து நாளை வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதிகளை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மண்டலம் நாளை காலை 3 முதல் 6 மணி இடையிலான நேரத்தில் புதுச்சேரி -சென்னை இடையே கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தொடர் கன மழைக் காரணமாக
சேலம்,நீலகிரி,தர்மபுரி , சென்னை, வேலூர், திருபத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை ,கடலூர்,செங்கல்பட்டு,கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மற்றும் அரியலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அந்த்தந்த மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.#Weatherreport