tamil news
  • மாவட்ட சுகாதார சங்கம் வேலை
  • test
  • டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும்-அனைத்து அரசு, தனியார் ஆய்வகங்களுக்கு பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தல்
  • அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்டாலின் இரங்கல்! - ரூ.3 லட்சம் நிதியுதவி!
  • இஸ்ரேலில் 160 பேர் உயிரிழப்பு. 1000 பேர் காயம்.. உலக அளவில் பெரும் சோகம்..!!
  • கர்நாடக எல்லை அத்திப்பள்ளில் பட்டாசு கடை விபத்து - ,இதுவரை 14 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

விவசாயகள் போராட்டம் வெற்றி! தேர்தலால் சட்டத்தை திரும்பப்பெற்ற மோடி!

Updated: 19-11-2021 11:40 am

tamil news

விவசாயகள் போராட்டம் வெற்றி! தேர்தலால் சட்டத்தை திரும்பப்பெற்ற மோடி!


பாஜக தமையிலான மோடி அரசு விவசாயம் உற்பத்தி பெருக்க வேண்டும் எனக்கூறி பல எதிர்ப்புகளுக்கு நடுவில் 3 வேளாண்மை சட்டத்தை நிறைவேற்றியது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் 150 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதில் டெல்லி பகுதியில் விவசாயிகள் பனியிலும் குளிரிலும் மழையிலும் வெயிலிலும் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.


இந்த நிலையில் அடுத்த வருடம் 5 மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை ரூ 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்து விட்ட காரணத்தால் ,அதன் தாக்கம் நடைபெற்ற உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்களில் பாஜக கட்சிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது.இதனால் பயந்து போன பாஜகவின் மோடி அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக பல மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாநில அரசுகள் குறைக்க தொடங்கின.


இருப்பினும் விவசாயிகள் போராட்டம் மென்மேலும் தொடர்ந்து கொண்டே இருப்பது உத்தரபிரதேசம் மற்றும் பக்கத்து மாநில தேர்தல்களில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் என கட்சி தலைவர் கருதியதால், மோடி அரசு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுகிறோம் என தற்போது அறிவித்துள்ளது.


ஆனால் விவசாயிகள் இதை ஏற்க மறுத்து தற்காலிகமாக போராட்டத்தை திரும்பப் பெறுவதாகவும், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 3 சட்டங்களும் திரும்பப் பெற்றால் மட்டுமே போராட்டம் முழுவதுமாக திரும்பப் பெறப்படும் என்று அறிவித்துள்ளனர். இதற்கு பாஜக மோடி அரசு," வருங்கால குளிர்கால கூட்டத் தொடரிலேயே இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ரத்து செய்யப்படும்", என்று அறிவித்துள்ளது.


 இதுதொடர்பாக பல்வேறு மாநிலக் கட்சியினர் ," பாஜக மோடி அரசின் இந்த இன்று 3 வேளாண் சட்டங்களின் ரத்து என்ற அறிவிப்பு, விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி", என்று அறிக்கை அளித்து வருகின்றனர். சிலர் தேர்தலுக்காக மத்திய அரசு பயந்து கொண்டு இந்த சட்டத்தை பின் வாங்கி விட்டதாக கூறுவது அல்லாமல் பின்வாங்கியதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை அளித்து வருகின்றனர் .


ஏற்கனவே இந்த மூன்று வேளாண் சட்டங்களும் தமிழக சட்டமன்றத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.#formerwinagovt