Updated: 05-01-2022 05:53 pm
நீட் தேர்வு விவகாரம்- ஆளுநர் உரையை புறக்கணித்த விசிக !
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது.இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் தொடங்கியது. அதிமுக விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கியதும் ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் தேர்வு ரத்து செய்ய ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளதற்காகவும்,அதற்கு அவர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏக்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.#vck