tamil news
  • மாவட்ட சுகாதார சங்கம் வேலை
  • test
  • டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும்-அனைத்து அரசு, தனியார் ஆய்வகங்களுக்கு பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தல்
  • அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்டாலின் இரங்கல்! - ரூ.3 லட்சம் நிதியுதவி!
  • இஸ்ரேலில் 160 பேர் உயிரிழப்பு. 1000 பேர் காயம்.. உலக அளவில் பெரும் சோகம்..!!
  • கர்நாடக எல்லை அத்திப்பள்ளில் பட்டாசு கடை விபத்து - ,இதுவரை 14 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

கே.பி.அன்பழகனின் சொத்து 600 கோடியாக உயர்வு.? அடுத்தடுத்து என்ன..?

Updated: 19-11-2021 07:33 pm

tamil news

கே.பி.அன்பழகனின் சொத்து 600 கோடியாக உயர்வு.? அடுத்தடுத்து என்ன..?


கடந்த அதிமுக ஆட்சியின் போது தமிழக அரசின் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் கேபி அன்பழகன.இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கிருஷ்ணமூர்த்தி என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்திருந்தார். அதில் ,"அவர் போட்டியிட்ட தேர்தலில் காண்பிக்கப்பட்ட சொத்தானது பல மடங்கு உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது கடந்த 2006 ஆம் ஆண்டு தேர்தலின் போது, கே.பி.அன்பழகன் குறிப்பிட்ட சொத்துக்களின் மதிப்பு 5356889 ரூபாய். ஆனால் 2011 தேர்தலில் 268103790 ரூபாய் என்று சுட்டிக்காட்டி உள்ளார். ஐந்து வருடங்களில் இவருடைய சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும் ,இவர் தனது உறவினர்கள் நண்பர்கள் பெயரில் கட்டிடங்கள் கட்டுவதற்கு முறைகேடாக ஒப்பந்தம் பெற்று கொடுத்ததாகவும்,பினாமி பெயரில் கர்நாடகா ஆந்திரா தமிழகத்தின் பல பகுதிகளில் சொத்துக்கள் வாங்கி உள்ளதாகவும்,அதன் அடிப்படையில் இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி வழக்கு தொடுக்க வேண்டும்," என குறிப்பிட்டுள்ளார்.


லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்பகட்ட விசாரணை கூட ஆரம்பிக்காததால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அரசு தரப்பில் விளக்கம் கேட்டது , அதற்கு தமிழக அரசு தரப்பில் "புகாரில் உண்மை தன்மை உள்ளது என்றும், விசாரிக்க சிறிது கால அவகாசம் வேண்டும்", என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.


 இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அடுத்த மாதம் 17-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர். ஏற்கனவே கே.பி. அன்பழகனின் நண்பர் என்று கூறப்படும் ,பக்கத்து ஊரில் உள்ள காண்ட்ராக்டர் ஒருவர் கட்டிய கட்டிடம் இடிந்து விழுந்தது தொடர்பான சர்ச்சை அடங்கி முடிவதற்குள் , இந்த விசாரணை ஆரம்பித்தால் பலரது சொத்துக்கள் லஞ்ச ஒழிப்புத் துறையால் முடக்க நேரிடும் என்றும், இதனால் கேபி அன்பழகனின் அரசியல் அத்தியாயம் கேள்விக் குறியாகலம் என்று விவரம் தெரிந்த அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.K P #AnbazaganDVAC